search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு"

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று 103.37 அடியாக உயர்ந்தது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    நேற்று 7 ஆயிரத்து 28 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 7 ஆயிரத்து 87 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 1000 கன அடியும், கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.01 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 103.37 அடியாக உயர்ந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 7 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 9 ஆயிரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்தும், உற்சாகமாக படகு சவாரி சென்றும் மகிழ்ந்து வருகிறார்கள். #MetturDam
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 62.59 அடியாக உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் 5 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கன மழையில் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் கடந்த 30-ந் தேதி 57.11 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 62.59 அடியாக உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் 5 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 82.35 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2495 அடியாக இருந்தது. நேற்று 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை முதல் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.

    124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.93 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 4476 கன அடியாக இருந்தது . அணையில் இருந்து கர்நாடக பாசனத்திற்காக 3434 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2-ந் தேதி 18 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்த நிலையில் நேற்று தண்ணீர் வரத்து 7007 கன அடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 5908 கன அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ×